வளமான நாட்டில் அழகான வாழ்க்கைக்காக ஒரு விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவதற்காக, பொது மக்கள் விளையாட்டு மைதானங்களை அமைக்கும் எண்ணக்கருவின் கீழ், நாவின்ன பொது விளையாட்டு மைதானத்தை நவீனமயமாக்கும் திட்டம், நேற்று (நவம்பர் 13) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, மஹரகம நகர சபைத் தலைவர் எஸ்.எம். சமன் சமரகோன், நகர சபையின் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


