நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) வத்தளை மற்றும் ஹெந்தல பகுதிகளில் அமைந்துள்ள மூன்று வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4.5 மெட்ரிக் டொன்னுக்கு மேற்பட்ட காலாவதியான உலர்ந்த மீன்கள் மற்றும் பேரீச்சம்பழங்களும் வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெற்றிகரமான பிரதிவாதத்தின் பின்னர் குறித்த சான்றுப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட கையிருப்புப் பொருட்கள் (08.09.2025):
• காலாவதியான பேரீச்சம்பழம் – 3.6 மெட்ரிக் டொன்
• காலாவதியான சின்ன மீன் (sprats) – 1 மெட்ரிக்
டொன்.
• காலாவதியான உலர்ந்த சின்ன மீன் – 300 கிலோ
கிராம்.
2003ம் ஆண்டின் 9ம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், 2014.08.15 அன்று வெளியிடப்பட்ட விசேட வார்த்தமாணி இலக்கம் 1875/38 இல் உள்ள வழிகாட்டல் எண் 52 ஐ மீறியதற்காக 27.08.2025 அன்று வணிகர்களுக்கு மொத்தம் ரூ. 55,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அனைத்து வணிகர்களுக்கும் CAA மீண்டும் நினைவூட்டுன்கிறது: விற்பனைக்கான பிற பொருட்களுடன் காலாவதியான அல்லது நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்களை சேமிப்பது குற்றமாகும்.


