டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரான Lawrence Errol Coomarawel Marti தனது தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அதற்குரிய காசோலை, கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியிடம் கையளிக்கப்பட்டது.


