அதிகரித்து வரும் கொடூரமான விபத்துகளைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள்

  • :

அண்மையில் நடைபெற்ற விபத்துகள் குறித்து கவனம் செலுத்தி, 'விபத்துக்களைத் தடுக்கும் பாதுகாப்பான இலக்கை' வழங்குவதற்கான நிலையான திட்டத்தை உருவாக்குவதற்கான பொதுப் பொறிமுறையை செயல்படுத்த சம்பந்தப்பட்ட குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

 

போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் செயற்படுத்தப்படும் குறுகிய கால திட்டம் மற்றும் நீண்ட கால திட்டம் குறித்து தெளிவு படுத்தும் விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இதை விளக்கினார்.

 

போக்குவரத்தின் பாதுகாப்பிற்காக ஒரு முறையான வீதிக் கட்டமைப்பு, பாதுகாப்பான வாகனக் குழு மற்றும் நல்ல நடத்தை கொண்ட ஓட்டுநர்களைக் கொண்ட ஒரு அமைப்பின் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

 

சட்டங்கள் மற்றும் தண்டனைகளுக்கு மட்டும் அல்லாமல், மனப்பான்மை மாற்றம் மூலம் போக்குவரத்து பாதுகாப்பிற்கான கூட்டு நிறுவன ஒருங்கிணைப்பை நிறுவுதல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பான வாகனம் ஓட்டுவதை உருவாக்குதல் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன. 

 

அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மோட்டார் போக்குவரத்துத் துறை, வீதிப் பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு, வீதி அபிவிருத்தி ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் நிலையான வீதி பாதுகாப்புத் திட்டத்தைத் தயாரிப்பது குறித்த விவரங்களையும், போக்குவரத்து பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ள உத்தேச பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அமைச்சர் ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

சகல தூர பஸ் பயணங்களுக்கு முன்னர் அடிப்படைத் தன்மைகளை பரீடசிப்பதைக் கட்டாயப்படுத்துதல், ஆரம்பத்தில் கொழும்பு பெஸ்டியண் மாவத்தை மற்றும் மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் மேற்பார்வையின் கீழ் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த ஒழுங்குமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

 

தூர சேவை சுற்றுலா பஸ்களிலும் இந்த தன்மையை பயிற்சிப்பது கட்டாயப்படுத்துதல், 100 கிலோ மீட்டரை விட அதிக தூரம் பயணிக்கும் பஸ்களுக்காக மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களுக்காக தகைமை சான்றிதழ் பயணத்திதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுதல், மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்துக்கு இணங்க பொதுப் போக்குவரத்து சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு பயிற்சியைப் பெற்றுக் கொள்வதுடன் பயணிகள் போக்குவரத்து சாரதி அனுமதி பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்குதல், தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ள அநாவசிய அலங்காரங்களை நீக்குதலை விரைவுப்படுத்துதல், லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்காக சாரதி உதவியாளர் ஒருவரை கட்டாயமாக்குதல், சாரதிகளின் ஓய்வு, தூக்கத்தை கண்காணிப்பதற்கு மற்றும் பரீட்சிக்கப்படாத பயணங்கள் தொடர்பாக தூக்கத்தை மேற்பார்வை செய்வதற்கு மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல் தொடர்பாக செயற்கை நுண்ணறிவு கருவிகள் பொருத்துதல், சாரதிகளின் தொழில் தகைமையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், அனாவசியமான ஒலி எழுப்புதல் மற்றும் வெளிச்சத்தை நிருவகித்தல், பஸ்களின் பழுதுகளை அறிக்கையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள வட்ஸ்அப் இலக்க ஊடாக தகவல் வழங்கி பழுது பார்ப்பதற்கு பயணிகளுக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குமுறைக்கு கல்வி அமைச்சு உடன் இணைந்து புதிய சட்ட மற்றும் ஒழுங்கு விதிகளை தயாரித்தல் மற்றும் இதற்காக அதிபர்களின், பெற்றோர்கள், மற்றும் வாகன உரிமையாளர்களுடன் வாகனங்களின் தகைமை தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருதல் இவ்வேலைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. 

 

2026 ஜனவரி மாதம் முதல் தூரசேவை பஸ்களுக்காக இருக்கைப் பட்டிகளை அணிவதை கட்டாயப்படுத்துதல், புகையிரதத்தில் காணப்படும் குறைபாடுகளினால் ஏற்படும் விபத்துக்களுக்காக புகையிரதத் திணைக்களம் மற்றும் காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து புகையிரதக் காப்புறுதி முறையை அறிமுகப்படுத்துதல், வாகன விபத்துகளின் போது தற்போது வழங்கப்படும் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை அதிகரிப்பதற்காக சட்டத் திருத்தத்திற்கு யோசனைகளை முன்வைத்தல் உட்பட வாகனத்தின் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது அமைச்சர் விரிவாக கருத்துக்களை தெளிவுபடுத்தினார். 

 

 

Related Articles