பயிர் சேதத்திற்கு இழப்பீடாக 1640 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது - கமநல மற்றும் விவசாய காப்புறுதி சபை

பயிர் சேதத்திற்கு இழப்பீடாக 1640 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது - கமநல மற்றும் விவசாய காப்புறுதி சபை
  • :

இலவச பயிர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் நெல், சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா போன்றவற்றுக்கு 95128 ஏக்கர் பயிரிட்ட 79602 விவசாயிகளுக்கு சுமார் 1640 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கமநல மற்றும் விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

வெள்ளம், கடும்மழை, வறட்சி, நோய்கள், பூச்சிகள் மற்றும் காட்டு யானை சேதம் போன்ற இயற்கை பேரழிவுகளின் கீழ் சேதமடைந்த பயிர்களுக்கும் இங்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதுடன், விவசாயிகளிடமிருந்து எந்த கட்டணமும் அறவிடாமல் பயிர் சேதத்திற்கான இழப்பீட்டை அரசாங்கம் ஏற்கிறது.

பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போது விவசாயிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதும், விவசாயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த தொடர்ந்தும் ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், இந்த பயிர் சேத காப்பீட்டு நிதியை அவர்களின் கணக்குகளில் உடனடியாக வரவு வைப்பதன் மூலம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கமநல மற்றும் விவசாய காப்புறுதி சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles