பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தனமான 'BNS SOMUDRA JOY' கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தனமான 'BNS SOMUDRA JOY' கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
  • :

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான 'BNS SOMUDRA JOY' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக (2025 ஜனவரி 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

இவ்வாறாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Frigate (Modified Hamilton Class High Endurance Cutter) ரக 'BNS SOMUDRA JOY' போர்க்கப்பலானது, 115.2 மீற்றர் நீளம் கொண்டதுடன் மொத்தம் 274 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக Captain Md. Shahriar Alam கடமைப்புறிகிறார்.

இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளுக்கும், தீவின் பல பகுதிகளுக்கும் கப்பலின் அங்கத்தவர்கள் செல்ல உள்ளனர். அத்துடன், கப்பலின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கடற்படையினருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியும் கப்பலுக்குள் நடைபெற்றது.

மேலும், 'BNS SOMUDRA JOY' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு 2025 பெப்ரவரி 02 ஆம் திகதி தீவிலிருந்து புறப்படவுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]