- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இந்து சமய ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி
ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்றது.
பாடசாலை சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது கல்வி சீர்திருத்தங்களின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் செயல்பாடு சார்ந்த கல்வி முறையை நோக்கி நகரும்போது, பாடசாலைகளில் மதக் கல்வியும் எதிர்காலத்தில் செயல்பாடு சார்ந்ததாக மாறும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்து மதம் பாடத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகவும், இதை நிவர்த்தி செய்ய ஒரு தீர்வு தேவை என்றும் இந்து சமய ஆலோசனைக் குழு சுட்டிக்காட்டியது. இதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதால், அது முடிந்த பிறகு முறையான திட்டத்தின்படி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் சமநிலைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
தற்போது செயல்படாது உள்ள இந்து மாணவர் சங்கங்களை மீண்டும் செயல்படுத்தி பராமரிப்பது பொருத்தமானது என்று இந்து சமய ஆலோசனைக் குழுவினால் இங்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது.


