பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக பெற்றோர்களுக்கு மேலதிக செலவுச் சுமையை சுமத்தாதவாறு குறைந்த செலவில் மற்றும் அழகான முறையில் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்த வேண்டும் என அறிவுத்தலொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ தெரிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலைகளில் நிதி முகாமைத்துவம் தொடர்பாக வெளியிடப்பட்ட 54/2023 சுற்றறிக்கை மற்றும் ஏனைய நிதி சுற்றறிக்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும் அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாது செயற்பட்ட சம்பவங்கள் சில அண்மையில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.


