PDNA கருத்தரங்கில் தாங்குதிறன்மிக்க மீட்சிக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்

PDNA கருத்தரங்கில் தாங்குதிறன்மிக்க மீட்சிக்கான உறுதிப்பாட்டை பாதுகாப்பு செயலாளர் மீண்டும் உறுதிப்படுத்தினார்
  • :
‘டிட்வா’சூறாவளியின் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் இறுதிப்படுத்தல் பணிமனை இன்று (பெப்ரவரி 9) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

 இந்தப் பணிமனை, இலங்கையின் அனர்த்தத்திற்கு பிந்தைய மீட்பு செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க தேவையான மதிப்பீடுகளை இறுதிப்படுத்தும் நோக்கில், இதனுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2025 நவம்பர் மாதத்தில் PDNA செயல்முறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தொழில்நுட்ப குழுக்கள் அனர்த்தத்தின் தாக்கங்களை அளவிடும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அவற்றின் கண்டறிதல்களைச் சரிபார்த்து மேம்படுத்தும் தளமாக இப்பணிமனை செயல்பட்டதுடன், இறுதி PDNA அறிக்கை வெளியீட்டிற்கும் உதவுவதாகவும் அமையும்.

 
இந்தப் கருத்தரங்கில், ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளர், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் (UNRC), ஐ.நா. அபிவிருத்தி பங்காளி நிறுவனங்கள், தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், மேலும் தேசிய திட்டமிடல் திணைக்கள மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் (DMC) பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களும் கலந்துக் கொண்டனர்.

Related Articles