பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக கௌரவ சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு நேற்றைய தினம் (22) பாராளுமன்றத்தில் கூடியபோது, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் வழிமொழிந்தார்.
கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.