பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள பொலிஸ் வைத்தியசாலையில் நேற்று (01) அவசர கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
இதன் போது வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினை மற்றும் குறைபாடுகள் தொடர்பாக வைத்தியசாலை பணியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அங்கு விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் உரிமையாளர்களின் நலன்களையும் விசாரித்தார்.
வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.