தேசிய காலநிலை மத்திய நிலையத்தின் எதிர்வு கூறல் பிரிவினால் வெளியிடப்பட்டது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்
2025 மார்ச் மாதம் 09 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 மார்ச் மாதம் 09 ஆம் திகதி காலை 05.30 ට வெளியிடப்பட்டது.
மார்ச் மாதம் 10, 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் தற்காலிக மாற்றத்தை எதிர்பார்க்கப்படுவதுடன், விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உட்பட நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யலாம்.
இன்று இரவு வேளையில் கிழக்கு கரையோரப் பிரதேசத்தில் மழை சிறிதளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி, மாத்தறை, களுத்துறை, மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
காலை வேளையில் பனிமூட்டம் நாடு முழுவதும் ஆங்காங்கே காணப்படும்.