ஆனையிறவு உப்பளத்தை அண்மையில் திறக்கவுள்ளதால், அதன் செயற்பாடுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் நேற்று (07) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இணைந்து கொண்டார்.
இவ்வளவு காலமும் குறைபாடுகளுடன் செயற்பட்ட அரசாங்கத்தின் தொழிற்சாலைகளில் உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடனான நவீன மயப்படுத்தப்பட்ட இத்தொழிற்சாலை ஊடாக 26ஆம் திகதியில் இருந்து நுகர்விற்காக உப்பு சந்தைக்கு அனுப்பப்படும்.