புதிய ஆயுர்வேத ஆணையாளராக ஏ. எம்.ஜி.ஆர். தீப்தி சுமனசேன மற்றும் உதவி ஆணையாளராக வைத்தியர் எம். டபிள்யூ. பத்மகுமார ஆகியோர் நியமனம் பெற்று இன்று (06) காலை தமது உத்தியோகபூர்வ பணிகளை மகரகம நாவின்னையில் அமைந்துள்ள ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் அலுவலகத்தில் ஆரம்பித்தனர்.
இலங்கை நிருவாக சேவையில் விசேட தர உத்தியோகத்தரான ஏ. எம்.ஜி.ஆர். தீப்தி சுமனசேன இது வரை தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளராக சேவையாற்றினார்.
தொழில் அதிகாரியாகஜதொழில் திணைக்களத்தில் சேவையாற்றுவதற்கு இணைந்த அவர் அத்திணைக்களத்தில் உதவி ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளதுடன், குவைத் தூதரகத்தில் அமைச்சின் ஆலோசகராக சேவையாற்றியுள்ளதுடன், தீப்தி சுமன நிருவாக சேவையில் நீண்ட கால அனுபவம் மிகுந்தவர்.
இந்நிகழ்வில் மதகுருமார்கள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர்களான சாமிக கமகே, கே. பீ. யோகசந்திர, ஆயுர்வேத திணைக்களத்தின் பிரதான கணக்காளர் டி. நிலூகா ராமநாயக்க உட்பட ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள், ஆயுர்வேத வைத்தியர்கள் என பலர் கலந்து கொ
ண்டனர்,


