நலன்புரி நன்மைகளுக்கு தகுதியானவர்களின் விவரங்களைப் புதுப்பிப்பித்தல்

  • :

2023 ஆம் ஆண்டுக்கான “அஸ்வெசும” அரசாங்க நலன்புரி நன்மைகளைப் பெறத் தகுதி பெற்ற மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் விவரங்களைப் புதுப்பித்தல் நடவடிக்கைகளை இன்று (06) முதல் ஆரம்பிக்க  நலன்புரி நன்மைகள் சபை  தீர்மானித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார்.



அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு  தெரிவித்தார்.

2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் பிரிவு 23 இன் படி, இந்த தகுதியுள்ள நபர்களின் விவரங்கள் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் கூறினார்.

அதன்படி, www.eservices.wbb.gov.lk என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது படிவங்களை நிரப்பி பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் சமர்ப்பிப்பதன் மூலமோ இதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர் அல்லது பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு மற்றும் 1924 என்ற துரித தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

Related Articles