புதிதாக நியமனம் பெற்றுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசன்த ரொட்ரிகோ மற்றும் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை, தனது அமைச்சில் சந்தித்து கலந்ரையாடலில் ஈடுபட்டனர்.
இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் சம்பிரதாயபூர்வமாக அமைச்சரை சந்தித்த அவர்களுக்கு அமைச்சர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதன்போது நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.