புதிய பயிர் காப்புறுதித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல காப்புறுதி மாதம்.

புதிய பயிர் காப்புறுதித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல காப்புறுதி மாதம்.
  • :

காப்புறுதி மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும்  பாதிப்புகளை முகாமை செய்து புதிய பயிர்ச்செய்கைக்  காப்புறுதி முறை ஒன்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் திட்டம் கமத்தொழில் மற்றும்  கமநலக் காப்புறுதிச் சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது நீண்ட காலமாக மாற்றமடையும் கமநலத் துறையுடன் சம்பந்தப்பட்டவாறு மற்றும் விவசாயிகளின் கோரிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் இந்த பல்வேறு காப்புறுதி யோசனை முறை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரச கொள்கையாக நெல்லுக்காக 5 ஏக்கர்கள் மற்றும் சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், சோயா  போன்ற செயல்களுக்காக 2.5  ஏக்கர் வரையான அரசாங்க பங்களிப்பின் கீழ் சகல செய்கையாளர்களுக்குமாக ஆரம்ப அனர்த்தங்களை உள்ளடக்கும் விதமாக இவ்இலவசக் காப்புறுதி யோசனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக குரக்கன், உழுந்து, கச்சான், கௌபி, பாசிப்பயறு, எள்ளு மற்றும் கொள்ளு போன்ற பயிர்களுக்காகவும் மானிய அடிப்படையில் தவணைக் கட்டண முறையின் கீழ் காப்புறுதி யோசனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுதவிர, கிழங்கு வகைகளுக்காக கொண்டு வரப்படும் பயிர்கள், பெருந்தோட்டப் பயிர்கள், மரக்கறி மற்றும் பழ வகைகள், மற்றும் பூ உற்பத்திகளுக்காக விவசாயிகளுக்குத் தாங்கிக் கொள்ளக் கூடியதாக நியாயமான தவணைக் கட்டணத்தின் கீழ் காப்புறுதி யோசனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அபாயத்தை முகாமை செய்வதற்கு இக்காப்புறுதி யோசனை முறையினால் அதற்கான இயலுமையை வழங்கியுள்ளதாக கமத்தொழில் மற்றும்  கமநலக் காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles