யுத்த வீரர் நலனின் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றத்தை குறிக்கும் வகையில், மாற்றுத் திறனாளி யுத்த வீரர்களுக்காக புதிய மின் சக்கர நாற்காலிகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று(ஏப்ரல் 09) ரணவிரு சேவா அதிகார சபை (RSA) வளாகத்தில், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் S. B. Kohona (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சி, இதற்கு முன் தனியார் பங்களிப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற நன்கொடைகlளுக்கு மேலதிகமாக முதல் முறையாக பூரண அரச நிதி மூலம் இந் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்பது முக்கிய சிறப்பம்சமாகும்.
நிகழ்வில் உரையாற்றிய பிரிகேடியர் S. B. Kohona (ஓய்வு) பூரண மாற்றுத் திரனாளி யுத்த வீரர்களின் நாளாந்த வாழ்க்கையை மேம்படுத்துவது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று வலியுறுத்தினார். தேசத்திற்காக தமது உடல் உறுப்புகளை அர்ப்பணித்த யுத்த வீரர்களின் நலனை உறுதி செய்ய இத்தகைய திட்டங்களை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ரணவிரு சேவா அதிகார சபையின் பணியாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிறப்பு அதிதிகள், மாற்றுத்திறனாளி யுத்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


