Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு Doosan Bobcat India Pvt Ltd இனால் 22 மில்லியன் ரூபா பெறுமதியான பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு Doosan Bobcat India Pvt Ltd இனால் 22 மில்லியன் ரூபா பெறுமதியான பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது
  • :
டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்திற்கு, Doosan Bobcat India Pvt Ltd நிறுவனம் 22 மில்லியன் ரூபா பெறுமதியான B760 ரக பெகோ இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது

 இதற்கான ஆவணங்களை Doosan Bobcat India Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Suk Namkoong மற்றும் C‑Com Equipment Pvt Ltd இன் தலைவர் கிறிஸ்டி எரவ்வல ஆகியோர்,

இன்று (19) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சம்பத் கொட்டுவேகொட, இந்தியா மற்றும் சார்க் நிறுவனத்தின் விற்பனைப் பிரதானி அனீஸ் குன்னும்மால் (Aneesh Kunnummal), Edward & Christie நிறுவனத்தின் பொது முகாமையாளர் விஜித பத்திரண மற்றும் C‑Com ஐ பிரதிநிதித்துவப்படுத்தி ஜயந்த புஷ்பகுமார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles