Royal Australian Naval Academy இல் 2024 செப்டெம்பர் 23 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்ற அடிப்படை நீரியல் அளவீட்டு பாடநெறியில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமி அந்த பாடநெறியின் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதையும் வெனின் நினைவுப் பரிசையும்(WAINING MEMORIAL PRIZE) வென்றார்.
Royal Australian Naval Academy இல் நடைபெற்ற இந்த அடிப்படை நீரியல் அளவீட்டு பாடநெறியில் அவுஸ்திரேலிய கடற்படையைச் சேர்ந்த 04 மாலுமிகளும், பிஜி, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை மற்றும் கம்போடியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 05 மாலுமிகளும் கலந்துகொண்டனர். அதன்படி, வெளிநாட்டு மாலுமிகளை விடவும் கோட்பாடு மற்றும் நடைமுறை பரீட்சைகளில், அதிக புள்ளிகளைப் பெற்றதன் மூலம் பயிற்சியில் மிகவும் திறமையான மாலுமிக்கு வழங்கப்படும் 'DUX' விருதை வென்றதால், அவுஸ்திரேலிய தேசிய கடற்படை சம்மேளனத்தின் (WAINING MEMORIAL PRIZE) பரிசை XS 114053 மாலுமி ஆர்பிஜி சிந்தக வென்றார்.
மேலும், ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமியால் 'DUX' விருதை 1966 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டு கடற்படையைச் சேர்ந்த ஒருவரால் இந்த விருதை வென்றது இதுவே முதல் முறையாகும்.
மேலும், ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமி அவுஸ்திரேலியாவில் கற்கைநெறியை மேற்கொண்ட முதலாவது மாலுமியாவார், இது அனைத்து பயிற்சி மாலுமிகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைவது மட்டுமன்றி, இலங்கை கடற்படைக்கும் பெருமை சேர்த்துதரும் விடயமாகும்.