தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்
  • :

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்களிடம் இருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோரியுள்ளது.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டம், ஆளுகை, பொது நிர்வாகம், சமூக சேவைகள், ஊடகத் துறை, அறிவியல் மற்றும் தொழினுட்பவியல் அல்லது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் அறிவு, அனுபவம் மற்றும் திறமையைப் பறைசாற்றி பகிரங்க வாழ்வில் தமக்கென சிறந்த நிலையினை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

அவ்வாறு பெயர் குறித்து நியமிக்கப்படுபவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக, ஏதேனும் மாகாண சபை உறுப்பினராக அல்லது உள்ளூரதிகாரசபை உறுப்பினராகவோ அல்லது ஏதேனும் பகிரங்க அல்லது நீதிசார் பதவியை அல்லது வேறேதேனும் இலாபமீட்டும் பதவியை வகிக்காதவராகவோ, ஏதேனும் அரசியற் கட்சியுடன் சம்பந்தப்படாத ஆட்களாகவோ, ஏதேனும் தொழிலைக் கொண்டு நடாத்தாதவர்கள் அல்லது ஏதேனும் உயர்தொழிலைப் புரியாத ஆட்களாவோ இருக்க வேண்டும்.

பெயர் குறித்த நியமனங்கள் www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகத் தயாரிக்கப்படல் வேண்டும். உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட பெயர் குறித்த நியமனங்கள் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு 2025 பெப்ரவரி 7 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரின் நியமனம்’ எனக் குறிப்பிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]