ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொடர்ச்சி 2...
1 முதலீட்டிற்கு அனுகூலமான சூழலை உருவாக்கல்
முதலீடு தொடர்பாக இலங்கையானது தொடர்ந்து பின்பற்றி வந்த முறையற்ற மற்றும் பக்கசார்பான கலாச்சாரமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வியாபாரத்திற்கு பதிலாக நம்பிக்கை, விருப்பத்திற்கு பதிலாக எதிர்வு கூறக்கூடிய திறமை, சலுகைக்கு பதிலாக பங்குவகிக்கக்கூடிய வகையில் புதியதொரு சூழலை கட்டியெழுப்பி வருகிறோம். இவ்வாறான சூழலிலானது சிறந்த முதலீடுகளை கவர்வதற்கு வழிவகுக்கின்றது.
இது எமது நாடு மீண்டும் சுமூக நிலைமைக்கு திருப்புவதற்கு அவசியமான வலுவை வழங்குகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மிகவும் சக்தி வாய்ந்த விதிகளுக்கு இணங்க ஊக்குவிப்பு முறைமையை உருவாக்குவதற்கு மூலோபாய அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்திற்கு மற்றும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்திற்கும் தேவையான சீராக்கங்களை முன்மொழிவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இச் சீராக்கங்களினால் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு அவசியமான செயற்பாடுகளை சீராக்குதல் ஊக்குவிக்கும் முறைமையின் வெளிப்படத் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் இணக்கப்பாட்டினை பெற்றுக்கொடுக்கும். இச் சீராக்கல் மூலம் எமது நாட்டிற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு பாய்ச்சலானது குறிப்பிடும் படியாக அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
பொருளாதார வளர்ச்சி, தொழில் வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பொருளாதாரத்தில் தாங்கிக்கொள்ளும் சக்தியை அதிகரிப்பதற்கு உதவும் முகமாக இலங்கை பொருளாதார சமூக உட்பட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வது மிக முக்கியமானதாகும். அரசுடன் உறுதியான பங்காளர்களாக இணைவதனூடாக தனியார் துறையினர் இவ் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் முக்கியமானதொரு பங்களிப்பை செய்யக்கூடியதாக உள்ளது. வெளிப்படைத் தன்மையான நீதிச் சட்டகமொன்றின் கீழ் “அரச தனியார் பங்குடைமை (PPP) சட்டம்” தொடர்பான சட்டவாக்கம் செப்தம்பர் மாதத்தில் பொதுமக்கள் கருத்துக்ளைப் பெற்றுக்கொள்வதற்காக பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2026 ஆரம்பத்தல் இச் சபையின் அனுமதிக்காக முன் வைக்கப்படும்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும், முதலீடுகளை பாதுகாப்பதற்குமாக புதிய “முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம்” 2026 ஆண்டு முற்பகுதியில் அங்கீகரிக்கப்படும்.
தற்போது அமுலில் இருக்கும் முதலீட்டு வலையங்களுக்கு அண்டியதாக சேவை வலையங்களாக உதவி வலையங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதனூடாக பிரதான முதலீட்டு வலையங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கும், பொருளாதார நலன்களை மாகாண மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார பெறுமதி சங்கிலியுடன் ஒன்றிணைப்பதற்குமான சாத்தியம் காணப்படுகின்றது. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயிற்சியாளர்களுக்கு புதிய சந்தர்ப்பங்களை உருவாக்குதல், தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துதல், கைத்தொழில் மயமாக்களின்பொருளாதார நலன்களை மாகாண மட்டத்தில் விரிவுபடுத்துவற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்பொருட்டு ஏற்கனவே ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதோடு அதற்கு மேலதிகமாக மேலும் ரூபா 1,000 மில்லியன் ஒதுக்குவதற்கும் முன்மொழிகின்றேன்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறையிலும், முதலீட்டை அதிகரிப்பதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மற்றும் முதலீட்டுக்கு சாதகமான சூழலை இதுவரையில் செயற்பாட்டு ரீதியாக உறுதிப்படுத்தப்படாமையினால் இத்துறையின் மீது முதலீட்டாளர்களின் கவர்ச்சியானது சவாலாக காணப்படுகின்றது. கடந்த கால அரசாங்கங்களினால் பாரிய செலவில் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் குருநாகல் மற்றும் காலியின் காணப்படுகின்றன. இதனை நிர்மாணித்த ஒப்பந்தக்காரர்களுக்கு மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளினால் கடன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படாத நிலுவையான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக ரூபா 1,500 மில்லியன்கள் இவ் வருடத்தில் திருப்பிச் செலுத்தி இத் திட்டமானது தனியார் துறையின் முதலீட்டுக்காக வாய்ப்பளிக்கப்படும். மேலும், இரண்டு பூங்காக்கள் திகன மற்றும் நுவரெலியா நகரங்களை மையப்படுத்தி இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னுரிமை துறைகளில் அல்லது தகைமை பெறும் கருத்திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச முதலீட்டு வரையறையை பூரணப்படுத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசா முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
இலங்கை முதலீட்டு சபையின் கீழ் கருத்திட்டங்களுக்கு அனுமதியை பெற்றுக்கொடுக்கும் நடைமுறையானது, இலத்திரனியல் தொழில்நுட்ப முறையின் கீழான பிரத்தியேக கரும பீட (Single Window) பொறிமுறையினூடாக அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பிரத்தியேக கருமபீட பொறிமுறையினூடாக முதலீட்டுச் செயற்பாடுகளானது வினைத்திறனாக, வெளிப்படைத் தன்மையுடன் மற்றும் விரைவாக செயற்படுத்துவதற்கு வழிவகுப்பதோடு முதலீட்டாளர்களுக்கு வியாபார தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான நம்பிக்கையை மற்றும் சௌகரிகத்தை பெற்றுக்கொடுக்கும். இதன் பொருட்டு ஏற்கனவே ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
காணிப் பயன்பாட்டு கொள்கை திட்டமொன்றை தயாரிக்கும் செயற்பாட்டை முறைப்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அவசியான காணிகளை விடுவிப்பதன் வினைத்திறனை மேம்படுத்துவது இன்றியமையாதாகும். இதன் பொருட்டு முதலீட்டுச் சபை போன்ற காணியுடன் தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களினதும் வசதிகளை மேம்படுத்துவதற்காக அந் நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணி தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய மத்திய இலத்திரனியல் தரவுத் தளத்தை உருவாக்குவதற்கு இவ் வரவு செலவுத் திட்டத்தினூடாக ரூபா 100 மில்லியன் ஒதுக்கத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிகின்றோம். அதேபோல், முதலீட்டாளர்களுக்கு அவசியமான காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக புதிய சட்டவரைவொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், முதலீட்டின் தன்மைக்கு பொருந்தும் வகையில் காணி மதிப்பீட்டினை தீர்மானிக்கும் பொறிமுறை ஒன்றினை அறிமுகம் செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
எமது முந்திய வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட, அரச உடமையான வியாபார முயற்சிகளில் வகைகூறல், வௌிப்படைத் தன்மை மற்றும் நிர்வாகம் மற்றும் இலாபம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் அரச வியாபார முயற்சிகளின் பங்குரிமைகளைக் கொண்ட அரச கம்பனியொன்றை உருவாக்குவதற்கான சட்டவாக்கம் 2026 ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் அரச மற்றும் தனியார் பங்குபற்றுனர்களின் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன், தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இத் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக மேலும் ரூபா 250 மில்லியன்களை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தேசிய ஏற்றுமதி நாமத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.
நாங்கள் பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் சுதந்திர வியாபார ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். அதற்காக அமைச்சரவையினால் விசேட திறன்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக் குழுவினால் தற்போதுள்ள வர்த்த உடன்படிக்கைகள் மீளாய்வு செய்தல் மற்றும் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
சர்வதேச சந்தைகளில் இலங்கை உற்பத்திகள் மற்றும் சேவைகளை விரிவாக்குவதற்காக ஏற்றுமதியை நோக்காக் கொண்ட தொழில் முயற்சிகள் விசேடமாக சிறிய மற்றும் நடுத்தர வியாபார மற்றும் வளர்ந்து வரும் சேவைத்துறைகளுக்கு வர்த்தக கண்காட்சிகளில் பங்குபற்றுதல், உற்பத்திகளை சான்றுபடுத்துதல், இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் போன்ற வேலைத்திட்டங்களுக்கு தேவையான நிதியினை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 250 மில்லியன் பெற்றுக்கொடுக்கப்படும்.
தேசிய ஒற்றை வர்த்தக கரும பீடம் (Trade National Single Window) / வர்த்தக வசதிகளை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத்தில் இலங்கையின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக வர்த்தக வசதிகளை மேம்படுத்துவது அத்தியவசியமானாகும். அங்கு தேசிய ஒற்றை வர்த்தக கரும பீடம் உட்பட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்தல், சட்ட விதிகள் இற்றைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், நடைமுறைகளை தரப்படுத்தல், கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை கிரயத்தை குறைத்தல் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு உலகளாவிய வர்த்தக சந்தைகளுடன் வினைத்திறனான முறையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு அவசியமான திறன்களை பெற்றுக்கொடுப்பது முன்னுரிமையான தேவைப்பாடாகும். அதற்காக தேசிய ஒற்றை வர்த்தக கரும பீட வசதியினை மேம்படுத்துவதற்காக ரூபா 2,500 மில்லியன்களை பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிகின்றேன்.


