2. இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை வலுப்படுத்தவதற்கான ஒன்றிணைந்த வேலைத் திட்டம்

2. இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை வலுப்படுத்தவதற்கான ஒன்றிணைந்த வேலைத் திட்டம்
  • :

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொடர்ச்சி 3...

 

 


 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்தி தொடர்பில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறனான தொடர்பினை மேம்படுத்துவதற்காக கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB), தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகாரசபை (NEDA), சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவு (SMED) ஆகியவற்றின் செயற்பாடுகளை ஒன்றினணத்து கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் (IDB) விடயப் பரப்பின் கீழ் கொண்டுவருவதற்கு முன்மொழிந்தார் .

கைத்தொழில் வலயங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்து உரிய முறையில் முகாமை செய்வதற்காக 2026 இல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 4,000 மில்லியனிற்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மொத்த தேசிய உற்பத்தியில் 52 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு செய்கின்ற அதே வேலை மொத்தத் தொழிற்படையில் அரைவாசிக்கு கிட்டிய அளவில் பங்களிப்பு செய்கின்றது. அத் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி கிடைப்பனவை மேம்படுத்தும் நோக்கில் உள்ளுர் வங்கிகளினூடாக முதலீடு மற்றும் தொழிற்பாட்டு மூலதன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சலுகை வட்டி வீதத்தில் கடன்களை பெற்றுக்கொடுப்பதற்காக அரச ஆதரவுடனான பல கடன் திட்டங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு கடன்களை பெற்றுக்கொடுக்கும் போது உறுவாகின்ற நிச்சயமற்ற தன்மையை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய கடன் காப்பீட்டு நிறுவனத்தினூடாக பிணையில்லாமல் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன்களை பெற்றுக்கொடுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை எங்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2025 ஆண்டு இதுவரையில் ரூபா 4,027 மில்லியனிற்கு மேற்பட்ட பிணையில்லாக் கடன்கள் இதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2026 ஆண்டில் ரூபா 7,000 மில்லியன் அளவிலான கடன்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிறுவனத்ததை உருவாக்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடனுதவியாக ஐ.அ. டொலர் 50 மில்லியன் பெற்றுத்தந்துள்ளது.

 வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் தொழிற்படு மூலதனம் மற்றும் முதலீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரூபா 25 மில்லியன் வரையிலும் பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்ற வியாபாரங்களுக்கு ரூபா 15 மில்லியன் வரையிலும் சலுகை வட்டியில் கடன்களை பெற்றுக்கொடுக்க ரூபா 25,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ரூபா 50 மில்லியன் வழங்குவதற்காக ரூபா 5,900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

 விவசாய பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி செய்தல்

o புதிய விரிவான கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டித் தள்ளுபடியுடன் ரூபா 3 மில்லியன் வரையிலான விவசாய பயிர்ச் செய்கைக் கடன் பெற்றுக்கொடுப்பதற்கு ரூபா 1,700 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

o தொழில் முயற்சியாளர்களுக்காக சலுகை வட்டியில் ரூபா 50 மில்லியன் வரையில் கடன் பெற்றுக்கொடுப்பதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் அபிவிருத்தி கடன் திட்டமொன்றை உருவாக்குவதற்கு ரூபா 7,700 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

o விவசாய பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி செய்வதற்கு சலுவை வட்டி வேலைத் திட்டத்தின் கீழ் ரூபா 50 மில்லியன் வரையில் கடன் வழங்குவதற்காக ரூபா 6,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அடமானக் கடன் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ரூபா 50 மில்லியன் வரையில் சலுவை வட்டி வீதத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ரூபா 15,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

o விவசாயத்துறை கருத்திட்டங்களுக்கு நிதி அடைவினை அதிகரிப்பதற்காக நிலைபேறான விவசாயிகள் கடன் நிதியினை உருவாக்குவதற்கு ரூபா 800 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.


 இதற்கு மேலதிகமாக இளைஞர் தொழில் முயற்சிக் கடன் திட்டம், நுண்ணிதிக் கடன், மகளிர் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டலுக்கான கடன் உட்பட அனைத்து சலுகைக் கடன் முன்மொழிவுத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மீள் நிதியளிப்புக் கடன், நன்கொடைகள், காப்பீட்டுக் கடன், பிணையற்ற கடன் மற்றும் சலுகை வட்டிக் கடன் போன்ற திட்டங்களை அமுல்படுத்துவதற்காக 2026 ஆண்டில் ரூபா 80,000 மில்லியன் கடன் வழங்குவதற்கு அவசியமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் துறைவாரியான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு தற்போது ஐ.அ. டொலர் 3 மில்லியனிற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு வழங்கப்படுகின்ற மூலதனக் கொடுப்பனவு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரத்துறை வரை விரிவுபடுத்துவதற்கும் அம் மூலதனக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டை ஐ.அ. டொலர் 250,000 தொகை வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

Related Articles