ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொடர்ச்சி 5.
டிஜிற்றல் பொருளாதார அபிவிருத்தி என்பது அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்கு தீர்மானம் மிக்க பாதையாகும். அபிவிருத்திப் பாதையில் இலங்கையானது பல சந்தர்ப்பங்களை தவரவிட்டுள்ளது. எவ்வாறாயினும் டிஜிற்றல் பொருளாதார நலன்களை அடைந்துகொள்வது தவரவிடக்கூடாது. 2026 இல் ரூபா 25,500 மில்லியன்களுக்கு மேலாக அரச முதலீட்டுடன் இலங்கையை டிஜிற்றல் மயமாக்களில் குறிப்பிடும் படியான பங்கொன்றை அடைந்துகொள்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்தல், முதலீட்டு செயற்பாடுகளை ஒருங்கமைத்தல் மற்றும் புத்தாக்கங்களுக்கு சார்பான சூழலை உருவாக்குதல் போன்ற காரணிகளின் மூலம் நிலைபேறான டிஜிற்றல் வளர்ச்சிக்கான வழிகாட்டலை பெற்றுக்கொடுக்கும்.
அரச நிறுவனங்களுக்குரிய கட்டணங்களை செலுத்துவதற்கு GovPay முறைமையினை பிரபல்யப்படுத்தல், தேசிய இணையப் பாதுகாப்பு மத்திய நிலையத்தை உருவாக்குதல், ஜனாதிபதி நிதியம், தூதரகங்களினூடாக பிரசைகளுக்கு ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் சேவையினை வினைத்திறனாக்குதல், டிஜிற்றல் மயமாக்கலை துரிதப்படுத்துவதற்காக GovTech நிறுவனத்தை உருவாக்குதல், எதிர் காலத்தில் உருவாக்கப்படவுள்ள டிஜிற்றல் பொருளாதார அதிகாரசபை 5G இற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற காரணிகள் டிஜிற்றல் மயமாக்களுக்கான சிறந்த அறிமுகத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. சகல பிரஜைகளினதும் பங்குபற்றலை பிரதிப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் அகன்ற அலைவரிசையின் கிடைப்பனவை விரிவாக்கி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீட்டை கவர்ந்து புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு உந்துதலை பெற்றுக்கொடுக்கக்கூடிய சூழலை உருவாக்கி வருகின்றோம். செயற்கை நுண்ணறிவு, க்லொவுட் (cloud) கணினி மற்றும் தரவுத்தளம் உள்ளடங்களாக அடுத்த பரம்பரைக்கு டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
தரவு பாதுகாப்பு அதிகாரசபையை அமுல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தனியாள் தரவு பாதுகாப்பு சட்டத்தை திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிற்றல் பொருளாதார சட்டமொன்றின் மூலம் டிஜிற்றல் பொருளாதார அதிகாரசபை மற்றும் டிஜிற்றல் பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவை உபகுழு, டிஜிற்றல் பொருளாதார மன்றம் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை பிரத்தியேக டிஜிற்றல் அடையாளம் (SLUDI), தேசிய தரவு பரிமாற்றம், இலங்கை அரச க்லவுட் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அரச சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒற்றைக்கூரை (Single Roof Digital Interface) டிஜிற்றல் இடைமுகமொன்றிற்கான மென்பொருள்களை உருவாக்குதல் போன்ற டிஜிற்றல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2026 வருடத்தில் ஆரம்பத்தில் இலங்கை பிரத்தியேக டிஜிற்றல் அடையாளம் (SLUDI) தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். 2026 மூன்றாவது காலாண்டில் முதலாவது டிஜிற்றல் அடையாள அட்டையை வெளியிடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.
பௌதீக பண நோட்டுக்களின் பாவனைக்கான நாட்டத்தை குறைத்து டிஜிற்றல் முறைகளினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் சமூகமொன்றாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாற்றத்திற்கான நோக்கமாவது, கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துதல், அதற்கான கிரயத்தை குறைத்தல், தவறான பணப் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் என்பனவாகும். 2025 முதலாவது காலாண்டில் ரூபா 2,000 பில்லியனிற்கு மேற்பட்ட அரச சேவைகளுக்கான கொடுப்பனவுகளை Lankapay தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண நோட்டுக்களின் பாவனையற்ற சமூகமொன்றை பிரபல்யப்படுத்துவற்கு அனைத்து அரச கொடுக்கல் வாங்கல்களுக்கும் நிகழ்நிலை கொடுப்பனவு முறைகளினூடாக செலுத்துவதற்கான வசதிகள் செய்து கொடுப்பதற்கு முன்மொழிகின்றோம். ஆரம்பமாக இச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்கான கட்டணங்களை நிகழ்நிலை முறைமையினூடாக செலுத்தும் போது அறவிடப்படும் சேவைக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கு முன்மொழிகின்றோம். இக் கொடுக்கல் வாங்கல்களுக்கான செலவினை ஈடுசெய்து கொள்வதற்கு மற்றும் கொடுப்பனவுத் தளத்தினை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களை தெளிவு படுத்துவதற்குமாக ரூபா 1,000 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம். மேலும், தேவையான வசதிகளை செய்துகொடுத்தல், பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரூபா 500 மில்லியன்களை ஒதுக்குவதற்கும் முன்மொழிகின்றோம்.
இதனடிப்படையில், 2026 ஜனவரி 01 முதல் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலத்திரனியல் கொடுப்பனவுகளுக்காக அறவிடப்படும் சேவைக் கட்டணங்களை நீக்குவதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும். மேலும், QR குறியீடு முறைமையினூடான கொடுப்பனவுகளை பிரசித்திப்படுத்துவதற்காக ரூபா 5,000 இற்கு குறைவான பெறுமதியுடைய கொடுப்பனவுகளை QR குறியீட்டினூடாக எவ்வித அறவீடுகளும் இன்றி மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை டிஜிற்றல் பொருளாதார அமைச்சுக்கான செலவுத் தலைப்பினூடாக பெற்றுக்கொடுப்பற்கு முன்மொழிகின்றோம்.
தரவுத் தளங்கள் அமைப்பதற்கான முதலீடுகளை கவர்ந்துகொள்வதற்காக எங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அவற்றில் தரவுப் பாதுகாப்பு இரகசியத் தன்மை, அந்தரங்கம் மற்றும் டிஜிற்றல் கட்டுப்பாட்டு சட்ட முறைமையை வலுவூட்டி முதலீட்டு நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அதனை நாம் இப்போதும் செய்து வருகின்றோம். இம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நிதிச் சலுகைகள், பசுமை மின்சக்தி பாவனைக்கான சலுகை முதற்கட்டத்தில் குறைந்த கட்டத்திலான மின்சாரம், தேவையான காணியினை சலுவை அடிப்படையில் பெற்றுக்கொடுத்தலினூடாக வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான சூழலை உருவாக்க வேண்டியிருக்கின்றது. இதன் மூலம் இலங்கைக்கான தரவுத்தள மையத்தில் உருவாக்குவதற்காக பிராந்திய மத்தியத்தில் மத்திய நிலையமாக விரிவாக்குவதற்கு உயர்ந்த சாத்தியக்கூறு காணப்படுகின்றது. இதற்காக ஆரம்பமாக 2026 ஆண்டில் ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.
பிராந்தியத்தில் இலங்கையானது டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதி செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புத்தாக்கங்களில் முன்னோடியாக திகழ்வதற்கு அரச தனியார் பங்குடைமை மற்றும் மூலோபாய டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டங்களுக்காக நடுத்தர கால நிதிகளானது அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும். புத்தாக்கங்களை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருத்திட்டங்களுக்கு நிதியீட்டம் செய்தல், வெளிநாட்டு பயிற்சி புலமைப் பரிசில்கள் மற்றும் தேசிய மொழி தரவுத்தொகுப்பினை அபிவிருத்தி செய்தல், பல்கலைக்கழக மற்றும் பாடசாலைத்துறைகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் க்லவுட் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ரூபா 750 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம். டிஜிற்றல் உட்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவினால் உந்தப்பட்டு புத்தாக்கத்தில் இலங்கையானது, பிராந்திய தலைமையமாக உருவாகுவதனை இந் நடவடிக்கைகள் துரிதப்படுத்தும்.
அனைத்து பிரசைகளுக்கும் டிஜிற்றல் தொழில்நுட்பத்தின் அணுகளை விரிவுபடுத்துதல், கல்வியுடன் தொடர்புபட்ட அணுகளுக்காக பிரோட் பேண்ட் வவுசர்களை அஸ்வெசும பயனாளிகள் மற்றும் ஏனைய குறைந்த வருமானக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றேன். இதன் மூலம் நேரடியாக நிகழ்நிலைக் கல்வி மற்றும் டிஜிற்றல் பொருளாதாரத்துடன் பங்குபற்றச் செய்வதே குறிக்கோளாகும். இதன் மூலம், டிஜிற்றல் எதிர் காலம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் நலன்களை பெற்றுக்கொள்ளும் சமூகமொன்றை உறுதிப்படுத்த முடியும். இது பாதுகாப்பான இணைய கொள்கைகளுக்கு உறுதியான கண்காணிப்புடன் அமுல்படுத்தப்படும்.
டிஜிற்றல் தொழில்நுட்ப விரிவாக்கலை துரிதப்படுத்துவதற்காக தொலை தொடர்பு கோபுரங்கள் போன்ற டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தேவையான அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும். இந்த டிஜிற்றல் தொழில்நுட்ப விரிவாக்கல் வேலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய கோபுரங்களுக்குரிய வரி 05 வருட காலங்களுக்கு நிறுத்தி வைப்பதற்கு முடிமொழிகின்றேன்.
முதலீட்டுகளை கவர்ந்துகொள்வதற்காக தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான சூழலின் வளர்ச்சியை (Star-ups ecosystem) துரிதப்படுத்துவதற்காக ரூபா 1,500 மில்லியன் (ஐ.அ. டொலர் 5 மில்லியன்) கொண்ட ஆரம்ப முதலீட்டுக்கு அரச ஆதரவுடன் கூடிய நிதியமொன்றினை 2026 ஆண்டில் ஆரம்பிப்பதற்கு டிஜிற்றல் பொருளாதார அமைச்சின் செலவினத் தலைப்பினூடாக ஏற்பாடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஏற்றமதி மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு முதலீட்டுச் சபையினூடாக “மெய்நிகர் விசேட பொருளாதார வளையமொன்றை (Virtual Special Economic Zones) உருவாக்குவதற்கு முன்மொழிகின்றேன்.


