ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் இருந்து 6......
அரசு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கை வரைபு தற்சமயம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதுடன் அரசின் ஆராய்ச்சி அபிவிருத்தி தொழிற்பாட்டுக்கு ஏற்புடையதாக, முன்னுரிமைகளை இடம்கண்டு அவற்றுக்கு உரியவாறு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆராய்ச்சிகளை வணிகமயப்படுத்தல்வரை கொண்டு செல்லும் தேசிய வேலைத்திட்டம் புதிய கொள்கையின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும். இந்த ஒட்டுமொத்த தொழிற்பாடும் மேற்பார்வை செய்யப்படுகின்ற, மத்திய நிருவாக நிறுவனமொன்றாக தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் வணிக நிறுவனமும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய பேரவையும் நிறுவப்படும் என்பதுடன் இதற்கான சட்டமூலம் 2026 ஆண்டில் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஆராய்ச்சிகளை வர்த்தக மயமாக்கல் வரை கொண்டு செல்வதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ரூபா 1,200 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கிளீன் சிறீலங்கா தொடர்ச்சியான நிகழ்ச்சித் திட்டம்
எமது முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில், ஒரு வளமான தேசத்தை - ஒரு அழகான வாழ்க்கையை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்ட கிளீன் சிறீலங்கா, ஒரு சுத்தமான நாடாக எமது நாடு மாறும் என்று முன்மொழியப்பட்டது. கிளீன் சிறீலங்கா கருத்திட்டத்தின் நோக்கங்களானவை, நெறிமுறைக் கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் தூய்மையான பௌதீக சூழல் மற்றும் நாடு முழுவதுமான தார்மீக உறுதிப்பாட்டிற்கு பதிலளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கிளீன் சிறீலங்கா திட்டம் ஒரு புத்தகத்திற்கோ அல்லது ஒரு திட்டத்திற்கோ மட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும், இந்தத் திட்டம் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது சில ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படக்கூடிய ஒரு வீதி வரைபடமோ அல்ல என்பதையும் நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். இது ஒரு பாரிய அளவிலான, இடைவிடாத திட்டமாகும், இது தொடர்ந்து முன்னாக்கி செல்லும் என்பதுடன் இது தொடர்ந்து முன்னோக்கி செல்லல் வேண்டும் என்பதுடன் மேலும் புதிய விடயங்கள் சேர்க்கப்படல் வேண்டும், இன்று நாம் அதை ஒரு யதார்த்தமாக்குகிறோம். கிளீன் சிறீலங்கா திட்டமானது சுற்றுச்சூழலின் அடிப்படையில் மட்டுமன்றி, அனைத்து அம்சங்களிலும் தூய்மையான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடு, பாதாள உலகம் அற்ற தூய்மையான நாடு, இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற தூய்மையான நாடு, அதிகார வெறி கொண்ட ஊழல் அரசியல்வாதிகள் அற்ற தூய்மையான நாடு, வினைத் திறனற்ற அரச சேவைக்கு பதிலாக வினைத் திறனான அரச சேவையைக் கொண்ட தூய்மையான நாடு, சட்டம் மற்றும் ஒழுங்கை மதிக்கும் தூய்மையான நாடு போன்ற ஒவ்வொரு வகையிலும் தூய்மையான நாட்டை உருவாக்கும் உன்னதமான எதிர்பார்ப்பை யதார்த்தமாக்குவதே இந்தத் தொடர்ச்சியான திட்டத்தின் நோக்கமாகும்.
கிளீன் சிறீலங்கா திட்டத்தை நாம், இந்த நாட்டை ஒரு தரப்படுத்தப்பட்ட மற்றும் அற்புதமான நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு, கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திட்டமாக அறிமுகப்படுத்தினோம். அந்தத் திட்டத்திற்காக ரூபா 6,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு தேசம் ஒன்றுபட்ட தேசிய நடவடிக்கை
கௌரவ சபாநாயகர் அவர்களே,
போதைப்பொருள் அச்சுறுத்தல் நமது நாடு எதிர்கொள்ளும் மிகவும் கடுமையாதொரு தொற்று என்பதையும், உண்மையான நிலைமையானது நாம் நினைப்பதை விட மிகவும் பயங்கரமானது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்த போதைப்பொருள் பரவலானது யாதுமறியாத இளம் குழந்தைகளின் பாடசாலைப் பைகளைக் கூட ஆக்கிரமித்து வருகிறது. இது அநேகமாக ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டுகிறது. இளம் தலைமுறையினர் கடுமையான ஒரு துயரத்திற்கு தள்ளப்படுகிறார்கள், மேலும் முழு நாடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் பேரழிவிற்கு இரையாகவும் பாதிப்பாகவும் மாறி வருகிறது. இந்த நிலைமை சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் ஒரு ஆபத்தான செய்தியை தருகின்றது. சுத்தமான மற்றும் அழகான நாட்டை உருவாக்க இந்த பயங்கரமான பேரழிவை தீர்க்கமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.போதைப்பொருள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் அரச சேவையில் ஊழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சிலர், அரசியல் ஆர்வத்தால் பிணைக்கப்பட்டுள்ள சங்கிலிகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகின்றனர். இந்த கடினமான மற்றும் அத்தியாவசியமான பணியானது ஒரு கட்சி அல்லது ஒரு குழுவால் மட்டுமே செய்யப்படக்கூடிய ஒரு தனிமையான போர் அல்ல. இந்த உன்னதமான தேசிய பணிக்கு முழு நாட்டையும் அழைக்கிறோம். அதன்படி, இன்று, முழு சமூக கட்டமைப்பிலிருந்தும் நச்சு போதைப்பொருட்களை அகற்றுவதற்கான 'ஒரு தேசம் ஒன்றுபட்ட தேசிய நடவடிக்கை ‘ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த சவாலின் கீழும் நிறுத்தப்படாது., பின்வாங்காது, இறுதிவரை போராடும் ஒரு திட்டமாகும்.
"ஒரு தேசம் ஒன்றுபட்ட தேசிய நடவடிக்கை" என்ற தூரநோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு அடிப்படையான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிகழ்சித்திட்டங்களை செயற்படுத்துவதற்காக ரூபா 1,500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, வெலிகந்த-சேனபுர உள்ளிட்ட 10 இடங்களில், நச்சு போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு செய்வதற்காக, புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் 10 தன்னார்வ புனர்வாழ்வு நிலையங்களை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சிறைச்சாலைகளின் கொள்திறன் 11,000 கைதிகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தாலும், அச்சிறைச்சாலைகளில் தற்போது 35,000 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு இணங்க, வினைத்திறனான சிறைச்சாலைச் செயற்பாடுகளுக்கான அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அதாவது அடையாளம் காணப்பட்ட சிறைச்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்தல், சிறை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கைதிகளை சமூகத் திட்டங்களுக்கு பரிந்துரைத்தல் மற்றும் திறந்தவெளி சிறைகளில் தடுத்து வைத்தல் போன்ற கருத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்காக ரூபா 2,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது


