தியத்தலாவை இலங்கை இராணுவ கலாசாலையில் (SLMA) புதிதாக அதிகாரம் பெற்ற 222 அதிகாரிகளை தேசத்திற்காக அர்ப்பணிக்கும் நிகழ்வு கடந்த 11ம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது.
கென்யா, உகாண்டா, காம்பியா மற்றும் செம்பியாவைச் சேர்ந்த 10 வெளிநாட்டு கெடெட் அதிகாரிகளும் இதில் உள்ளடங்குவர். அத்துடன், இந்திய தேசிய பாதுகாப்பு கலாசாலை மற்றும் அதிகாரிகள் பயிற்சி கலாசாலை அத்துடன் பங்களாதேஷ் இராணுவ கலாசாலை மற்றும் பாகிஸ்தான் இராணுவ கலாசாலை போன்ற புகழ்பெற்ற இராணுவ பயிட்சி கலாசாலைகளில் வெளிநாட்டு பயிற்சியை முடித்த பதின்மூன்று இலங்கை கெடெட் அதிகாரிகளுக்கும் இந்நிகழ்வின் போது அதிகாரம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் புதிய அதிகாரிகளைப் பாராட்டிப் பேசுகையில், “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியம்" என வலியுறுத்தினார்.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.