யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 32 வது தளபதியாக மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2024 டிசம்பர் 20 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி, மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் சர்வமத குருமார்களின் முன்னிலையில் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் முறையாக கடமைகளை பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, புதிய தளபதி குழு படம் எடுத்துக்கொண்டு, வளாகத்தில் மரக்கன்று நாட்டினார். பலாலியில் உள்ள போர்வீரர்களின் நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், படையினருக்கு உரையாற்றியதுடன் 2024 நவம்பர் 28 அன்று முகாமுக்கு அருகில் ஒரு கொள்ளையைத் தடுக்க உதவிய 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சார்ஜன் டப்ளியூ.டி.ஐ தினேஷ் குமாரவின் துணிச்சலான முயற்சி மற்றும் முன்மாதிரியான செயல்திறன் ஆகியவற்றைப் பாராட்டினார். அவரது செயலை கௌரவிக்கு வகையில் தளபதி பரிசு வழங்கினார்.
அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு புதிய தளபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இறுதியாக, புதிய தளபதி ஒரு கலந்துரையாடலை நடத்தியதுடன் அதில் கட்டளை அதிகாரிகளுக்கு விளக்க உரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.