கண்டி மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான சகல உரத் தேவைப்பாடுகளும் தற்போது பூர்த்தி அடைந்துள்ளதாக தேசிய உர தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
11,791 ஹெக்டெயர் விவசாய நிலத்தில் இந்த போகத்தில் நெல் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தலைமை அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் டபிள்யு. எம். டபிள்யு. ஜி. ஆனந்த குறிப்பிட்டார்.
கண்டி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்காக யூரியா பசளை 2,710 மெற்றிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், TSPவகை உரம் 734 மெற்றிக் தொன் மற்றும் MOP 975 மெற்றிக் தொன் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அரச உரக் கம்பனி மற்றும் 11 நிறுவனங்கள் கண்டி மாவட்டத்தில் உர விநியோகத்திற்காக முன்வந்துள்ளன.