"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" - 77ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் மிகவும் விமர்சையாக நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது.
குறைந்த செலவில், மக்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறைந்ததாக மற்றும் அதிக மக்களின் பங்களிப்புடன் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு அமைச்சர் திட்டமிட்டுள்ளது.
படைவீரர்கள் 1,870 என்ற எண்ணிக்கைக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு வரையறுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இம்முறை படைவீரர்களின் அணிவகுப்பில் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 1,511 ஆக குறைக்கப்பட்டது.
இம்முறை அணிவகுப்பிற்காக முப்படை வீரர்களின் வாகன அணி வகுப்பை நடத்தாத இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 19 விமானங்கள் சுதந்திர தின வைபவத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை தேசிய கொடியை வானில் ஏற்றிச் செல்வதற்காக விமானங்கள் 3 மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன.
சம்பிரதாய முறைப்படி சுதந்திர தின நிகழ்வுகளுடன் இணைந்ததாக கடலில் நண்பகல் 12 மணிக்கு கப்பலில் கடற்படையினரால் 25 மரியாதை வேட்டுக்கள் நடாத்தப்படவுள்ளன.