சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களில் தேசியக் கொடியை காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்மடுள்ளது.
பெப்ரவரி 04 திகதிய 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட சந்தர்ப்பமாகக் கருதி 2026 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை ஒரு வாரம் முழுவதும் அரசாங்க நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் சகல கட்டடங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி சம்பந்தப்பட்ட காலப் பகுதியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது நிருவாகம், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.


