டிஜிட்டல் இலங்கையை நோக்கிய பயணத்தில் தொழில்நுட்பத்துடன் மனித மற்றும் நிறுவன ரீதியான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்

டிஜிட்டல் இலங்கையை நோக்கிய பயணத்தில் தொழில்நுட்பத்துடன் மனித மற்றும் நிறுவன ரீதியான தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம்
  • :

கொழும்பு – இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வெறும் தொழில்நுட்பம் மாத்திரம் போதுமானதல்ல என்பதோடு, அந்தச் சேவைகளை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான பொருத்தமான மனிதவளமும் வலுவான நிறுவனக் கட்டமைப்பும் உருவாக்கப்படுவது அவசியமாகும். இந்த நோக்கத்தை முன்நிறுத்தி, புதிதாக நிறுவப்பட்ட டிஜிட்டல் மாற்றம் குறித்த அபிவிருத்திப் பங்காளர்களின் பணிக்குழுவின் (Development Partner Working Group on Digital Transformation) அங்குரார்ப்பணக் கலந்துரையாடல் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த விசேட கலந்துரையாடல் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன மற்றும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றதுடன், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது, பொதுமக்களுக்கு மிகவும் வேகமான மற்றும் இலகுவாக அணுகக்கூடிய டிஜிட்டல் பொதுச் சேவைகளை (Digital Public Services) உருவாக்குவதற்காக, அரசாங்கத்திற்கும் அபிவிருத்திப் பங்காளர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. அங்கு, டிஜிட்டல் சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும், அந்த அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் முறையான பயிற்சித் திட்டங்களைச் செயற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து அபிவிருத்திப் பங்காளர்களின் இந்த கூட்டு முயற்சியின் முதன்மை எதிர்பார்ப்பு, ஒவ்வொரு இலங்கையருக்கும் சம வாய்ப்புகளை வழங்குகின்ற, மிகவும் தரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) நிலையான டிஜிட்டல் எதிர்காலத்தை இந்நாட்டில் நனவாக்குவதாகும். நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான இந்த பொதுவான நோக்கத்திற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு இங்கு உடன்பாடு எட்டப்பட்டது.

Related Articles