'டிட்வா' சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்தல் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று, அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையில் மார்ச் 28ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது.
சேதமடைந்த வீடுகளைப் புனரமைக்கும்போது, மக்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் நகர்ப்புற பொது வசதிகளைக் கொண்ட பகுதிகளில் புதிய வீடுகளை நிர்மாணித்தல், மீண்டும் அனர்த்த பாதிப்புகளுக்கு உள்ளாகாத பாதுகாப்பான இடங்களைக் கண்டறிந்து கட்டுமானங்களை முன்னெடுப்பதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுடன் தொடர்ச்சியான தொடர்பாடலைப் பேண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து
இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது


