திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி அன்பளிப்பு

திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி அன்பளிப்பு
  • :
திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி நேற்று (09) வர்த்தகம், வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

 மியன்மார் அரசாங்கத்தின் இந்த அரிசி அன்பளிப்பு கடற்படையினால் சுங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இலங்கையின் மேன்மாற தூதுவர் Marlar Than Htaik இனால் வர்த்தக அமைச்சரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுக வளாகத்தில் இடம்பெற்றது.

திட்வா சூறாவளியின் பாதிப்பினால் நாட்டின் 20% விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதுடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிதி உதவிகளுக்கு மேலதிகமாக மியன்மார் அரசாங்கம் இந்த 500 மெற்றிக் தொன்அரிசி அன்பளிப்புச் செய்ததாக வர்த்தகம், வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

Related Articles