““திட்வா” சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் 23குடும்பங்களுக்கான வீடுகளை நிருமாணிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவிக் காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) ஊவா மாகாண சபையில் இடம்பெற்றது.
இதன் போது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக 50 இலட்சம் ரூபாய் வீதமும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக மதிப்பீடுகள் இன்றி ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதல் கட்டத்திற்காக காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதன்படி (முதலாவது தவணை) யின் கீழ் முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக 20 இலட்சம் ரூபாய் வீதமும், பகுதியளவுப் பாதிப்புகளுக்காக 3 இலட்சம் ரூபாய் வீதமும் தவணைக் கட்டணம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
இக்காசோலை வழங்கும் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பதுளை நகர சபை தலைவர் நந்தன கபுகொட, பதுளை பிரதேச சபையின் தலைவர் பாலித ஜயவர்தன, ஊவா மாகாண சபை பிரதம செயலாளர் அனூஷா கோகுல பெர்னாண்டோ, பதுளை பிரதேச செயலாளர் துஷாரி அனுராதா நாணயக்கார உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


