தற்போது நிருமாணப் பணிகள் நடைபெற்று வரும் பயணிகள் முனையக் கட்டிடத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தலும், விமான நிலைய செயல்பாடுகளை ஆய்வு செய்வதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, விமான நிலைய உதவி செயல்பாட்டு முகாமையாளர் அனுத் தயாவன்ச, பணிப்பாளர் பிரைமல் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


