உள்ளூர் ஆட்சி அதிகார சபைகளில் கொடுப்பனவு முகாமைத்துவத்தை மென்பொருளைப் பேணுவதற்கு அவசியமான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று

  • :

தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இடையே தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 45 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கணனி, Point of Sales Machine, அச்சு இயந்திரம் மற்றும் ஏனைய உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (12) யூனியன் பிளேசில் உள்ள மாகாண சபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. 

 டிஜிட்டல் அரசமயமாக்கம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி நிறுவனங்களில் வரவுகளை சேகரிக்கும், கணக்கீடு செய்யும், முகாமைத்துவம் மற்றும் ஏனைய சேவைகளை வழங்கும் டிஜிட்டல் மயமாக்கத்திற்காக அமைச்சினால் “Local Government Payment Management System - LGPMS” (உள்ளூராட்சி நிறுவனங்களில் கொடுப்பனவு முகாமைத்துவக் கட்டமைப்பு) எனும் பெயரிலான மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. 

 கட்டமைப்பு நிர்வாகம் (System Administration), நிகழ்நிலை கொடுப்பனவு (Online Payment), சான்றிதழ் மற்றும் அனுமதி பத்திரங்கள் வழங்குதல் (Certifications and License Issuing), மற்றும் ஏனைய விடயங்கள் (Other Applications) போன்ற ஐந்து விடயங்களை கொண்டதாக இந்த மென்பொருள் தற்போது மத்திய, சபர்கமுவ, தென் மற்றும் கிழக்கு மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் மாத்திரம் பயன்படுத்தப்படும்.

 இந்த மென்பொருள் சகல உள்ளூர் ஆட்சி நிறுவனங்களிலும் தேவைக்கு ஏற்ப இலவசமாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் அதற்காக அவசியமான தொடர்ச்சியான இற்றைப்படுத்தல்கள், பயிற்சி மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் என்பன அமைச்சினால் மேற்கொள்ளப்படும்.

 உள்ளூராட்சி நிறுவனங்களில் கொடுப்பனவு முகாமைத்துவ மென்பொருளை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தி வருவதுடன், அந்த மென்பொருளை உள்ளூராட்சி நிறுவனங்களில் நிறுவுவதற்காக அவசியமான கணனி உட்பட டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்காக நிதி அமைச்சினால் நிதி வருடாந்தம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 - பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 

Related Articles