2025 பெப்ரவரி 08ம் திகதிக்கான காலநிலையை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 08ம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது
நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யாத காலநிலை நிலவும்.
இன்றிலிருந்து எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என்றும் எதிர் கூறப்படுகிறது.