இலங்கையின் மிகவும் மூத்த விமானப் போக்குவரத்து நிபுணரான டொன் லயனல் சிரிமான்ன அண்மையில்; தனது 106வது பிறந்த நாளைக் கொண்டாடினார், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அவரை கௌரவித்தது.
1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி குருநாகலில் பிறந்த அவர், எயார் சிலோன் விமான சேவையில் தகவல் தொடர்பு அதிகாரியாக விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இவர் இலங்கையில் உருவான இரண்டாவது உரிமம் பெற்ற விமான சேவை தகவல் தொடர்பு அதிகாரி ஆவார்.
உலகளவில் விமானப் போக்குவரத்துத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக நிறுவப்பட்ட சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பை நிறுவ உதவிய 'சிகாகோ சாசனம்' அறிமுகப்படுத்தப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற விமானப் போக்குவரத்து நிபுணர்கள் அங்கீகாரத் திட்டத்தில் லயனல் சிரிமான்னவின் சேவை கௌரவிக்;கப்பட்டது.