2025 ஜூன் மாதம் 27ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூன் மாதம் 27ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேல, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்யலாம்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது பயணிக்கும் காற்று மணிக்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


