2025 ஜூன் மாதம் 28 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூன் மாதம் 28 28 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கு அதிகமான கனமழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
யாழ்ப்பாணம், மன்னார், அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவ்வப்போது பயணிக்கும் காற்று மணிக்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக காற்றினால் கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


