2026 பெப்ரவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (12ஆம் திகதி) மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


