2025 ஜனவரி 31ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவித்தல்
2025 ஜனவரி 31ஆம் திகதி காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
வடக்கு வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்பதுடன் திடீரென ஏற்படும் கடும் காற்று மற்றும் மின்னல் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.