வட மாகாணத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அபிவிருத்தி செய்யப்படுகிறது

  • :
வட மாகாணத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (19) வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசே​கள் அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் நடைபெற்றது.

 அடுத்த இரண்டு தசாப்தங்களிலும் அதற்குப் பிறகும் விமானப் போக்குவரத்துத் துறை அடையும் என்று எதிர்பார்க்கப்படும் விரைவான வளர்ச்சியை எதிர்கொண்டு உருவாக்கப்படும் எதிர்கால வாய்ப்புகளுக்குத் தேவையான மனித வளங்களைத் தயார்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு, தத்துவ மற்றும் நடைமுறை திட்டங்கள் மூலம் விமானப் போக்குவரத்துத் துறை குறித்த விழிப்புணர்வூட்ட எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles