"விபத்துக்களைக் குறைப்பதற்காக தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்" - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

"விபத்துக்களைக் குறைப்பதற்காக தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்" - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
  • :

இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான பிரதான காரணியாகவும், தடுக்கக்கூடிய மரணங்கள் மற்றும் ஊனங்களைப் பாதிக்கும் முக்கிய காரணியாகவும் இனங்காணப்பட்டுள்ள விபத்துகளைக் குறைப்பதற்கான தேசிய முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், பதினொன்றாவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை ஆரம்பிக்கும் பிரதான வைபவம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (06) காலை சுகாதார அமைச்சில் நடைபெற்றது. 

தேசிய விபத்து தடுப்பு ஆலோசனைக் குழு (NCPI) மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவு ஆகியவை இணைந்து 2026 ஆம் ஆண்டு ஜூலை 6 முதல் 10 ஆம் திகதி வரை நாடு முழுவதும் இந்த தேசிய நிகழ்ச்சியை நடத்துகிறது, மேலும் விபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மற்றும் இறப்புகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்குதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகும். 

மக்களின் உயிர் மற்றும் எதிர்கால பாதுகாப்பை பாதுகாக்கும் உன்னத இலக்குடன் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய விபத்து தடுப்பு வேலைத்திட்டம் இந்த வருடம் பதினொன்றாவது தடவையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், தற்போது இலங்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு விபத்துகளே பிரதான காரணம் என சுட்டிக்காட்ட முடியும். விபத்துக்கள் காரணமாக 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் 3 மில்லியன் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதன்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவர் ஒவ்வொரு வருடமும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் விபத்துக்குள்ளாகும் அபாயத்தை எதிர்நோக்குவதாக அமைச்சர் வலியுறுத்தினார். 

மேலும், நாட்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 6 முதல் 8 குடிமக்கள் விபத்துக்கள் காரணமாக மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர், மேலும் இந்த நிலைமை ஒரு கடுமையான சுகாதார பிரச்சினையாக கருதப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

15 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட பிரிவினரே இந்த விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அந்த வயதுப் பிரிவினரின் இறப்புக்கு விபத்துகளே முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்ட முடியும் என்றும், மொத்த இறப்புகளில் 8 சதவீதம் பேர் விபத்துக்களால் ஏற்படுவதாகவும் அமைச்சர் விபரித்தார். 

வீதி அமைப்பின் அபிவிருத்திக்கு விகிதாசாரமாக வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்

போக்குவரத் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தற்போது இளைஞர்கள் மற்றும் இந்நாட்டின் மிக முக்கியமான தொழிலாளர்களின் உயிர்களை ஊனங்களிலிருந்து பாதுகாப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஜூலை 6 முதல் 10 வரை செயல்படுத்தப்படும், மேலும் விரிவான விழிப்புணர்வு மற்றும் நடைமுறை செயல்பாடுகள் அனைத்து ஊடக நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.  இது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் முன்னுரிமைகளில் தரப்படுத்தப்பட வேண்டிய ஒரு பகுதி எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஜூலை 06 முதல் 10 வரை தேசிய விபத்து தடுப்பு வாரத்தில் 

ஜூலை 06 - சாலை விபத்துகளைத் தடுத்தல், 

ஜூலை 07 - பணியிடங்களில் விபத்துகளைத் தடுத்தல், 

ஜூலை 08 - வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல், 

ஜூலை 09 - நீரில் மூழ்குவதைத் தடுத்தல் 

ஜூலை 10 - பாடசாலை கள் மற்றும் முன்பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் போன்றவை பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சம்பிகா விக்கிரமசிங்க, அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த சிரிதுங்க, வைத்தியர் சமித்த சிரிதுங்க மற்றும் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு இந்த நிகழ்வில்

கலந்துகொண்டனர்.

 

Related Articles