அனுராதபுர நகரத்திற்குப் பூங்கா 

அனுராதபுர நகரத்திற்குப் பூங்கா 
  • :

“வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் அனுராதபுர நகரம் மற்றும் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பை பாதுகாத்து, சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட சகல மக்களுக்கும் இனிமையான சூழலை உருவாக்குவதற்காக அனுராதபுற நகரப் பூங்காவை சினேகபூர்வமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

வர்த்தக, வாணிபத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது. 

 

 

அதன்படி 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த அனுராதபுர கும்பிச்சன்குளம் நவீன மாதிரி நகரப் பூங்கா, சிற்றுண்டிச் சாலை, பொழுதுபோக்குப் பூங்கா, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா, மற்றும் நவீன புதுமையான பிரிவுகளுடன் முழுமையான மக்கள் பூங்காவாக இதனை அபிவிருத்தி செய்யும் பணிகள் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 

உலகில் காணப்படும் புதிய படைப்புகளின் பிரகாரம் இந்தப் பூங்கா நவீன மாதிரி நகரமாக அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

சுற்றுலா தொழிலை முன்னேற்றுவதற்கு அவசியமான சகல வசதிகளையும் உருவாக்குவதும் இத்துடன் இடம்பெறுகின்றது.

 

இந்நிகழ்வில் அனுராதபுர நகர சபை தலைவர் என் கருணாரத்ன, வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், உள்ளூர் ஆட்சி அதிகார சபைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 FB IMG 1754353514811

அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு

 

 

Related Articles