சுவிஸ் தூதரகத்தின் ஒத்துழைப்பில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட "அரசினால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் காணி அந்நியமாக்கல்" தொடர்பான ஆய்வின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு அண்மையில் (11) திருகோணமலை உப்புவெளி DSK தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவர் Dr. Siri Walt, அரசியல் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி, முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் ஜெயசிங்கம், அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டனர். நிகழ்வு ஆரம்பமானதும், ஆய்வு நூல் முக்கிய நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வு தொடர்பான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


