மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பம்
  • :

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் தமது விதைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

மாவட்டத்தில் 77858 ஹெக்டயர்  நிலத்தில் பெரிய நீர்ப்பாசன விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதுடன், 7361.8 ஹெக்டயர் நிலத்தில் சிறிய நீர்ப்பாசன விவசாயம் மற்றும் 42350.7 ஹெக்டயர் விவசாய நிலத்தில் மானாவாரீ நெற்செய்கை என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

 

மாவட்டத்தில் இம்முறை சிறு தானியங்களான பயறு 125 ஹெக்டயர் நிலத்திலும், கெளப்பி 350 ஹெக்டயர், உளுந்து 100 ஹெக்டயர் மற்றும் நிலக்கடலை 1957 ஹெக்டயர் நிலப்பரப்பிலும் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

 

அரசாங்கத்தின் உணவு பாதுகாப்பு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக மாவட்டத்தில் ஏலவே பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது பயிர்செய்கை இன்றி கைவிடப்பட்டுள்ள மேட்டு நிலங்களை அடையாளம் கண்டு அவற்றில் உணவுப் பாதுகாப்பை  உறுதிப்படுத்துவதற்கு இம்முறை விவசாய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles