திருகோணமலை மாவட்டத்தின் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் வேலைகளை பார்வையிடல்.

திருகோணமலை மாவட்டத்தின் பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் வேலைகளை பார்வையிடல்.
  • :

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நடுவூத்து கிராம உத்தியோகத்தர் பிரிவில் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத் திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உரிய இடத்திற்கு அண்மையில் (16) கள விஜயம் மேற்க்கொண்டனர் .

இதன்போது சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், மேலதிக பணிப்பாளர், பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரிகளினால், கட்டுமானங்கள் தொடர்பாகவும் விசேட தேவையுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுகாதார வசதிகள் மற்றும் அவர்களுடைய வசதிகள் தொடர்பாக எவ்வாறான அளவுத் திட்டங்களில் கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பொறியியலாளர் உடன் விரிவாக கலந்துரையாடினர்.

விசேட தேவையுடைய குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுகாதார வசதிகள் சரியான முறையில் பேணப்பட வேண்டும் எனவும், அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்ற வகையில் கட்டிடங்கள் சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் கட்டிடங்களில் உள்ள குறைபாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கென விசேடமாக அமைக்கப்படுகின்ற கட்டடம் என்பதினால் மிகவும் தரமான முறையில் இதற்குரிய சில வேலைகள் யாவும் உரிய திகதிகளில் அளவு திட்டங்களுக்கு ஏற்ப உரியவாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென மேலும் கூறினார்.

Related Articles