பிரித்தானிய முதன்மைச் செயலாளர் - அரசாங்க அதிபர் சந்திப்பு

பிரித்தானிய முதன்மைச் செயலாளர் - அரசாங்க அதிபர் சந்திப்பு
  • :

பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதேச மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு தேவையான வைத்திய உபகரணங்களின் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் அதற்கான உதவிகளை வழங்குமாறும் அரசாங்க அதிபர் கோரிக்கையினை முன்வைத்தார்.

மேலும், இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் முதன்மைச் செயலாளர் வினாவிய போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வார காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் போல் எதிர்காலத்தில் ஏற்படாவண்ணமிருக்க சீரான வடிகாலமைப்பு முறைகளின் அவசியம் பற்றி தெரிவித்த அரசாங்க அதிபர், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் இது வரை ரூபா.50 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டது எனவும் இதில் சமைத்த உணவு வழங்கல் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் என்பவற்றிற்காக ரூபா 49 மில்லியன் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ரூபா 1 மில்லியன் உடனடி அனர்த்த தணிப்பு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், எமது அரசாங்கத்திடம் மாவட்ட த்திற்கான தேவைப்பாடுகளை முன்வைத்த போது, நாம் கோரிய நிதி ஒதுக்கீட்டினை சம்பந்தப்பட்ட அமைச்சு விரைவாக விடுவித்தமையானது மகிழ்ச்சியான விடயம் எனவும் அரசாங்க அதிபரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

மீள்குடியேற்ற நிலவரங்கள், அஸ்வெசுமத் திட்டத்தில் பயனாளிகள் தெரிவு முறைமை, வீட்டுத் திட்டங்கள் போன்றவற்றின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் முதன்மைச் செயலாளர் கேட்டறிந்து கொண்டார். இதன் போது, யாழ்ப்பாண மாவட்ட த்திற்கான வீடமைப்புத் திட்டத்தின் தேவைப்பாடுகளையும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டதுடன் மேலும், மீள்குடியேற்ற வேலைத் திட்டங்கள் முன்னேற்றகரமாக நடைபெற்று வருவதாகவும், நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த காணியற்ற குடும்பங்களுக்கு காணி அரசாங்கத்தின் நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்டு வீடமைப்புத் திட்டமும் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன், ஒரு நலன்புரி நிலையத்தில் மாத்திரம் இரண்டு குடும்பங்களே தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கும் காணிக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இம் மாத இறுதிக்குள் அவ் ஒரேயொரு நலன்புரி நிலையமும் மூடப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பிரித்தானிய தூதரகத்தின் அலுவலர் செல்வி. ப்ராக் வேர்தூஸ் அவர்களும் உடனிருந்தார்கள்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]