தேசிய சுற்றாடல் தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வு

தேசிய சுற்றாடல் தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வு
  • :

தேசிய சுற்றாடல் தினம், தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் என்பவற்றை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மற்றுமொரு சிரமதானம் இடம்பெற்றது.

மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்திய சிரமதான நிகழ்வு நேற்று (26) திகதி மாவட்ட செயலக வளாகத்தினை அண்டிய வெளிப்புறப் பகுதிகளிலும் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களு க்கு அமைய நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன், மாவட்ட செயலக கணக்காளர் ரீ.மதன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களும், மாவட்ட செயலகத்தின் அனைத்து பிரிவுகளிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் இதன்போது கலந்துகொண்டு சிரமதானத்தினை மேற்கொண்டனர்.

டெங்கு ஒழிப்பை பிரதான நோக்கமாக கொண்டு, மாவட்ட செயலக வளாகத்திற்கு வெளியில் அண்டிய பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ரின்கள் மற்றும் பொலித்தீன் பைகள் என ஏராளமான உக்காத கழிவுகள் இதன் போது அகற்றப்பட்டு குறித்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

Related Articles